Hot News
Home » செய்திகள் » கூட்டமைப்பை குறை கூறுவதை விடுத்து சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது மக்களுக்கு என்ன செய்தார் என்று பட்டியலிடுமாறு சவால் -மதுசுதன்

கூட்டமைப்பை குறை கூறுவதை விடுத்து சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது மக்களுக்கு என்ன செய்தார் என்று பட்டியலிடுமாறு சவால் -மதுசுதன்

‘ தம்பி பிரபாகரன் கைநீட்டிய கூட்டமைப்பு இப்போது இல்லை எனவும் வீட்டின் கூரை பிடுங்கப்பட்டு வானம் தெரிவதாகவும்  வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஐயா அவர்கள் கூறியது நகைப்புக்குள்ளான விடயமாக தெரிகிறது. 

தம்பி பிரபாகரன் போராட்டத்தை முன்னெடுத்த காலத்தில் தமிழர் உரிமை சம்மந்தமாக எந்தவித பங்கெடுப்பும் இல்லாது அனைத்து அரச சலுகைகளையும் அனுபவித்து விட்டும், பல போராளிகள் மீது சட்டங்கள் பாய்ந்த போது நீதிபதியின் மனச்சாட்சியின்பால் சில விட்டுக்கொடுப்புக்களை மேற்கொள்ளாது இறுக்கமான தீர்புக்களை வழங்கியதோடு மட்டுமல்லாது, தம்பி பிரபாகரன் கைகாட்டாமல் கூட்டமைப்புக்குள் வீட்டுக்குள் நேர் வாசல் வழி புகுந்து  இறுதி வரை இருந்து பதவி அனுபவித்துவிட்டு வீட்டின் கூரையை பிரித்துக்கொண்டு வெளியேற நினைத்தவர் விக்னேஸ்வரன் ஐயா.

விீட்டுக்கூரை பிய்படாமல் அப்படியே இருக்கிறது என்பதையும் எனினும் வீட்டு்க்கு சில தோசங்கள் கழிய பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்பதையும் அவருக்கு தெரியப்படுத்த விரும்புகிறோம், அத்தோடு போராட்டம் நடைபெற்ற காலத்தில் தம்பி பிரபாகரன் என அவரால் அழைக்க முடிந்ததா? என அவர் மனதில் கைவைத்து சொல்ல வேண்டும்.இப்படி கூட்டமைப்பை குறைகூறி அரசியல் செய்வதனை தவிர்த்து மாகாண சபை முதலமைச்சர் ஆக அவர் பணியாற்றியபோது என்ன என்ன மக்கள் நல திட்டங்களையும்,  அபிவிருத்திகளையும் மேற்கொண்டார் என மக்களுக்கு பட்டியல் இட்டு அவரால் கூறி வாக்கு கேட்க முடியுமா என சவால் விடுக்கிறோம்.’ இவ்வாறு தெரிவிக்கின்றார் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் மதுசுதன்.