Hot News
Home » செய்திகள் » சிங்களவர்கள் முட்டாள்கள் என்பதை கூட்டமைப்பு அறியும்: குணதாச அமரசேகர

சிங்களவர்கள் முட்டாள்கள் என்பதை கூட்டமைப்பு அறியும்: குணதாச அமரசேகர

சிங்களவர்கள் முட்டாள்கள் என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறியும் என்பதால் சிங்கள அரசியல்வாதிகளை ஏமாற்றி, தமது இலக்கு நோக்கிய திட்டங்களில் அந்த கட்சி கைவைக்க ஆரம்பித்து விட்டது என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்தார்.

வடக்கு மாகாண முதலமைச்சராக விக்னேஸ்வரன் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இவ்விதமான வகையில் செயற்பட்டு விக்னேஸ்வரன் ஜனாதிபதி முன்னிலையில் முதலமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இதன் ஊடாக கூட்டமைப்பின் குள்ள நரித்தனம் தெளிவாக வெளிப்பட்டுள்ளது.

ஜனாதிபதி முன்னிலையில், ஜனாதிபதி மாளிகையில் சத்தியப் பிரமாணம் செய்ய தீர்மானித்ததால் மட்டும் அவர்களின் நாட்டை பிரிக்கும் பிரிவினைவாத நோக்கம் இல்லாமல் போய்விட்டது என்று கருத முடியாது.

இந்தியா தனது மூக்கனாங் கயிற்றை இலங்கை மீது போட்டு ஓட்டி வருகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்திய மற்றும் மேற்குலக நாடுகளுக்கு தேவையான வகையில் செயற்பட்டு வருகிறது என்பதை அதன் செயற்பாடுகள் உணர்த்துகின்றன. இதனை சிங்கள அரசியல்வாதிகள் புரிந்து கொள்ளவில்லை.

இறுதியில் வடக்கு கிழக்கில் தனி நாடு அமைந்த பின்னர் சிங்களவர்கள் வெறுமனே வானத்தை அண்ணார்ந்தது பார்த்து கொண்டிருக்க நேரிடுமே அன்றி வேறு எதனையும் செய்ய இடமிருக்காது என்றார்.

Home Email this

Author: TELO Media Team 1