Hot News
Home » செய்திகள் » புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஸ நாளை மறுதினம் பதவியேற்கிறார்

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஸ நாளை மறுதினம் பதவியேற்கிறார்

மஹிந்த ராஜபக்ஸ எதிர்வரும் 9 ஆம் திகதி புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

பதவியேற்பு வைபவம் நாளை மறுதினம் (09) காலை 8.30-க்கு களனி ரஜமஹா விகாரையில் இடம்பெறவுள்ளது.

இம்முறை பொதுத்தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஸ, 5 ,00,364 வாக்குகளைப் பெற்றார்.

இதனடிப்படையில், 11 ஆசனங்களைக் கைப்பற்றிய ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விருப்பு வாக்குகளின் பட்டியலில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ முன்னிலையிலுள்ளார்.

இந்நிலையில், ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு கிடைத்த வெற்றி முழு நாட்டிற்கும் கிடைத்த வெற்றியாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ​தெரிவித்துள்ளார்.

Author: TELO Admin