Hot News
Home » செய்திகள் » எதிர்காலத்தில் கூட்டமைப்பு விழிப்பாக செயற்படாவிட்டால் மக்கள் மத்தியில் அன்னியப்படும்!எஸ்.வினோ எம்.பி!

எதிர்காலத்தில் கூட்டமைப்பு விழிப்பாக செயற்படாவிட்டால் மக்கள் மத்தியில் அன்னியப்படும்!எஸ்.வினோ எம்.பி!

தமிழ்தேசியக் கூட்டமைப்பின் (ரெலோ) கட்சியில் வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம் இன்று புதுக்குடியிருப்பில் ஆலய வழிபாட்டில் ஈடுபட்டு கட்சி தொண்டர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளர்.

புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள கந்தசாமி ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளதுடன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது..

தேர்தல் முடிவுகளை பார்க்கின்ற பொழுது தமிழ்தேசியத்திற்கு ஆரவாகத்தான் மக்கள் வாக்கினையளித்துள்ளார்கள்.
தேர்தல் கால சலுகைகளுக்காக நிவாரணங்களுக்காக எங்கள் மக்கள் தேசிய கட்சியில் போட்டியிட்ட ஏனைய இனத்தவர்களால் ஈர்க்கப்பட்டுள்ளதை அவதானிக்கமுடிந்துள்ளது.

இது தவறான நிலைப்பாடாகும் எங்கள் மக்கள் தேசியத்தின் பால் அக்கறை கொண்டு செயற்படுகின்ற அதேவேளையில் இது போன்ற தேர்தல்கால ஏமாற்று நடவடிக்கைக்கோ அல்லது இதுபோன்ற சலுகைகளுக்கோ அகப்பட்டு தமிழ்இனத்தினை விற்று மானத்தினை விற்று செயல்படுவதை நாங்கள் அனுமதிக்ககூடாது.

தேர்தல் முடிவுகள் தமிழ்தேசியக்கூட்டமைப்புக்கு பாரிய வீழ்ச்சியை தந்துள்ளது. எதிர்காலத்தில் கூட்டமைப்பின் தலைவர்கள் இதுவிடையமாக விழிப்பாக செயற்படாவிட்டால் கூட்டமைப்பு மக்கள் மத்தியில் இருந்து அன்னியப்படும்.யாழ்ப்பாணத்தில் இரண்டு ஆசனங்களையும்,வன்னியில் ஒரு ஆசனத்தினையும்,மட்டக்களப்பில் ஒரு ஆசனத்தினையும்,அம்பாறையில் தமிழ் பிரதிநிதித்துவம் பறிபோயுள்ளது.
இதற்கு கூட்டமைப்பிற்கு எதிராக மகிந்தவினால் களம் இறக்கப்பட்ட கருணா குழுவினர் முக்கியகாரணமாக செயற்பட்டுள்ளார்கள். இந்த நிலை மாறவேண்டும்.மக்கள் இன்னும் விழிப்படையவில்லை என்பது தேர்தல் முடிவுகள் காட்டுகின்றது.

தமிழ்தேசியக்கூட்டமைப்பின் மீது குற்றச்சாட்டு இருக்கின்றது தவறுகள் இருக்கின்றது என்பது ஏற்றுக்கொள்கின்றோம் மக்களுக்கும் இவை புரிந்திருக்கும் இந்த குற்ச்சாட்டினை தொடர்ந்து கூறி தமிழ்மக்களை கூட்டமைப்பில் இருந்து பிரித்து எடுப்பதற்கு சில கட்சிகள் முயன்றுள்ளன.

இதன் காரணமாக வன்னி மாவட்டத்தில் பல சுயேட்சை குழுக்கள் இறக்கப்பட்டு வாக்குகள் பிரித்து எடுக்கப்பட்டுள்ளன இவை எல்லாம் தமிழ்தேசியத்திற்கான வாக்குகள்.

இந்த நிலமை எதிர்காலத்தில் மாற்றப்படவேண்டும் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் ஊடான தமிழ்தேசியகத்திற்கான பாராளுமன்ற ஆசனங்கள் குறைக்கப்பட்டுள்ளது என்பது கவலையளிக்கின்றது.

இதற்கான காரணம் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் தலைவர்களின் செயற்பாடும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள் காரணம்தான் இந்த பின்தங்கலுக்கு காரணம் இவை நிவர்த்தி செய்யப்படவேண்டும்.

தேர்தல் வரலாற்றில் கூட்டமைப்பின் அதிகூடுதலாக முன்னார் பாராளுமன்றத்தில் இருந்த அதிகளவானவர்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளமை இதுவே முதல்தடவையாகும் இந்த நிலமையினை எதிர்காலத்தில் சீர்செய்யப்படவேண்டும் இல்லையேல் மக்களிடம் இருந்து கூட்டமைப்பு அன்னியப்படுத்துகின்ற நிலை ஏற்படும்
கடந்த தேர்தல் பரப்புரையின் போது கூட்டமைப்பின் 9 வேட்பாளர்களும் ஒன்றாக இருந்த பொதுக்கூட்டம் ஒன்றினை காணமுடியாத நிலை இந்த நிலை மாறவேண்டும் எல்லோரும் தங்களின் தனிப்பட்ட விருப்பு வாக்கினை பெறுவதில் முயற்சிசெய்து பிரச்சாரங்களில் ஈடுபட்டார்கள்.
ஆனால் நாங்கள் ஒற்றுமையாக இருக்கின்றோம் என்று கூட்டமைப்பின் 9 வேட்பாளர்களும் மக்கள் மத்தியில் சென்று ஆதரவினை கோரமுடியாத நிலை கவலையளிக்கின்றது.தமிழ்தேசியக்கூட்டமைப்பு பரிசீலனைக்கு உட்படுத்தப்படவேண்டிய நிலையில் இருக்கின்றது அது நடைபெறும் என்று நினைக்கின்றேன்.

மாவைசேனாதிரோச அவர்கள் நீண்டகாலம் தமிழ்தேசியத்தின் போராட்டத்தின் பால் இணைந்து போரடியவர் யாழ்ப்பாணம் மக்களால் நிராகரிக்கப்பட்டது துரஸ்டவசமானது ஆனால் அதேவேளை ஆயுதவிடுதலைப்போராட்டத்திற்கு எதிரான கருத்துக்களை கொண்டவர்கள் எல்லாம் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய பிரச்சாரங்கள் செய்யப்பட்டுள்ளன இது பரிதாபத்திற்குரிய விடையம்.
எதிர்காலத்தில் தமிழ்தேசியக்கூட்டமைப்பினை பலப்படுத்த வேண்டும் மக்கள் எங்களுடன் இருக்கவேண்டும் கூட்டமைப்பு அழிந்துபோகின்ற நிலமை உருவாகுமாக இருந்தால் அதற்கான முழுப்பொறுப்பினையும் எதிர்வரும் காலங்களில் தமிழ்தேசியக்கூட்டமைப்பில் இருக்கக்கூடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியின் தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவர் உட்பட அனைவரும் பொறுப்பெடுக்கவேண்டிய நிலமை உருவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Author: TELO Admin