Hot News
Home » செய்திகள் » ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் தேர்தல் ஆணைக்குழுவில் கையளிப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் தேர்தல் ஆணைக்குழுவில் கையளிப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பெயர் பட்டியல் தேர்தல் ஆணைக்குழுவில் கையளிக்கப்பட்டுள்ளது.

அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் குறித்த பெயர் பட்டியல் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், திஸ்ஸ அத்தனாயக்க, ஹரீன் பெர்ணான்டோ, டயனா கமகே, எரான் விக்ரமரத்ன, ரஞ்சித் மத்தும பண்டார, மயந்த திஸாநாயக்க,இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

அதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ள நிலையில், இன்னும் இரண்டு தேசிய பட்டியல் ஆசனங்கள் மாத்திரமே பெயரிடப்படவுள்ளன.

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் அபே ஜன பல கட்சிகளின் தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பெயர்களே அவைகளாகும்.

தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினராக கலாநிதி ஹரினி அமரசூரியவை நியமிக்க அக்கட்சி நேற்றைய தினம் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Author: TELO Admin