Hot News
Home » செய்திகள் » மக்களையும் மக்களின் விடுதலையினையும் நேசிப்போர் ஒர் அணியில் ஒன்றிணையவேண்டும்!செல்வம் அடைக்கலநாதன்

மக்களையும் மக்களின் விடுதலையினையும் நேசிப்போர் ஒர் அணியில் ஒன்றிணையவேண்டும்!செல்வம் அடைக்கலநாதன்

இப்போது இருக்கின்ற அரசாங்கம் என்று எங்கள் மணவிகளை ஆகாய தாக்குதல் மூலம் படுகொலை செய்துள்ளது.அதே அரசாங்கம் இருக்கின்ற நிலையில் கடந்த காலங்களில் பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள் சுயமாக அஞ்சலி செலுத்துகின்ற நிலை காணப்பட்டது இப்பொழுது படையினரின் ஆட்சியினை கொண்டு தமிழர்களை அடக்க நினைக்கின்ற கோட்டபாஜ றாஜபக்ச அவரின் தலைமைகள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றுவிட்டோம் என்ற அகதையில் எங்கள் மக்களை கொன்று அழித்த இவர்கள் மீண்டும் படை அடக்குமுறைக்குள் எங்கள் மக்களை கொண்டு செல்வதற்கான செயற்பாட்டினை செய்து கொண்டிருக்கின்றார்கள் அதன் ஆரம்பம்தான் இந்த வணக்க நிகழ்வுகள் தடைசெய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களுக்கான அஞ்சலிசெலுத்துகின்ற வாய்ப்பினை தடுப்பதற்கான உரிமை யாரிடமும் இல்லை இதனை பார்வையாளராக பார்த்து செல்ல முடியாது என்பது என்னுடைய கருத்து அடுத்த ஆண்டு பாரிய அளவில் எங்கள் மக்களை வைத்துக்கொண்டு எந்த அடக்குமுறை வந்தாலும் எதிர்கொண்டு அஞ்சலி நிகழ்வினை நினைவிற்கொள்வோம்.அஞ்சலி நிகழ்வினை தடுத்து நிறுத்தும் செயற்பாடுகள் கண்டிக்கத்தக்கது.

முப்படையினரின் அடக்குமுறையினை தமிழர் தேசத்தில் மட்டும்தான் செய்துகொண்டிருக்கின்றார்கள் சிங்கள மக்களின் வாக்குளை பெறவேண்டும் என்பதற்காகவே இராணுவ அடக்குமுறை என்று தேர்தல் பிரச்சாரத்தில் நாங்கள் சொல்லி இருந்தோம்
இன்றைய தேர்தல் முடிவு ஒரு அபாய சங்கினை ஊதியுள்ளார்கள் மக்கள் மத்தியில் சென்று நாங்கள் என்ன செய்கின்றோம் என்று சொல்லவேண்டும்.

இனிவரும் காலங்களில் தமிழர் தேசத்தில் கோட்டபாய றாஜபக்சவின் கால்கள் ஆழமாக பதிய அனுமதிக்க முடியாது. இனிவரும் காலங்களில் மாவீரர் நினைவு வருகின்றபோது அதனை முன்னின்று செய்யவேண்டும் எந்த அடக்குமுறை வந்தாலும் நாங்கள் சந்திக்க தயார்.

இனிவரும் காலங்களில் இந்த மண்ணுக்காக மக்களுக்காக தங்கள் உயிர்களை ஈர்த்த தியாகிகள் போராளிகள் நினைவு நிகழ்வு மக்கள் வெள்ளத்துடன் மக்கள் அஞ்சலி செலுத்துகின்ற வாய்ப்பினை நாங்கள் உருவாக்குவோம்.

தேர்தலில் நாங்கள் பிரிந்து நின்று மக்களிடம் வாக்கு கேட்டோம் மக்கள் சரியான தண்டனையினை தமிழ்தேசியக்கூட்டமைப்பிற்கும் ஏனைய தமிழ் கட்சிகளுக்கும் கொடுத்துள்ளார்கள்.

பாராளுமன்றத்திலாவது நாங்கள் ஒன்றாக இருப்போம் வீரப்பேச்சுக்கள் பேசுவதில் அர்த்தம் இல்லை மக்களை நேசிக்கின்ற மக்களின் விடுதலையினை நேசிக்கின்ற அத்தனை பேரும் ஒரே அணியில் பாராளுமன்றத்தில் ஒன்றிணையவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Author: TELO Admin