Hot News
Home » செய்திகள் » தமிழ் மக்களால் தேரர் துரத்தப்பட்டார் என்ற வரலாறு வந்துவிடக்கூடாது – ஜனா எம்.பி

தமிழ் மக்களால் தேரர் துரத்தப்பட்டார் என்ற வரலாறு வந்துவிடக்கூடாது – ஜனா எம்.பி

அம்பட்டிய சுமணரத்தின தேரர் மட்டக்களப்பு தமிழ் மக்களால் துரத்தப்பட்டார் என்ற வரலாறு வந்துவிடக்கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான ரெலோ இயக்கம் சார்பாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் (ஜனா) தெரிவித்தார்.

இன்று நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் சற்று முன் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

மடக்களப்பு மாவட்டத்தில் பல விகாரைகள் உள்ளன. அங்குள்ள விகாராதிபதிகள் தமிழ் மக்கள் உட்பட ஏனைய இன மக்களோடு ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால் மட்டக்களப்பு நகரில் உள்ள மங்களாராமய விகாராதிபதி அம்பட்டியே சுமணரத்தின தேரர் பல அட்டகாசங்களை மேற்கொண்டு வருகின்றார்.

தேரரின் செயற்பாடுகளை மட்டக்களப்பு மாவட்ட மக்கள் எப்போதும் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.

அம்பட்டிய சுமணரத்தின தேரரை மட்டக்களப்பு தமிழ் மக்களால் துரத்தப்பட்டார் என்ற வரலாறு வந்துவிடக்கூடாது, என்றார்.

Author: TELO Admin