Hot News
Home » செய்திகள் » மன்னாரில் மீன், வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட நாணயக் குற்றிகள் மீட்பு: பாண்டிய மன்னர் காலத்தவையா?

மன்னாரில் மீன், வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட நாணயக் குற்றிகள் மீட்பு: பாண்டிய மன்னர் காலத்தவையா?

மன்னார் – நானாட்டான் பகுதியில் மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட 1904 நாணயக் குற்றிகளும், சான்றுப் பொருட்கள் சிலவும் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட மீன் மற்றும் வாள் சின்னம் பொறிக்கப்பட்ட 1904 நாணயக் குற்றிகளும் மன்னார் நீதவான் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மன்னார் நானாட்டான் சந்திக்கு அருகில் ‘வடக்கு வீதி’ என்னும் இடத்தில் தனியார் காணியொன்றில் வீடொன்றை நிர்மாணிப்பதற்காக அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்ட போது குறித்த பொருட்களுடன் பழமையான சட்டி, பானைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் நானாட்டான் பிரதேச சபையின் உப தவிசாளருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து முருங்கன் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு இதுதொடர்பில் தகவல் வழங்கப்பட்டு அகழ்வின் போது மீட்கப்பட்ட அனைத்துப் பொருட்களும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

இதேவேளை, மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட நாணயங்கள் பாண்டிய மன்னர்களின் முடியாட்சிக் காலத்துக்குரியவை என வரலாற்று நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

Author: TELO Admin