Hot News
Home » செய்திகள் » மலர் வளயம் வைத்து பொம்பியோ அஞ்சலி

மலர் வளயம் வைத்து பொம்பியோ அஞ்சலி

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக்கல் பொம்பியோ, இன்று கொச்சிகடை புனித அந்தோனியார் ஆலயத்துக்கும் விஜயம் செய்தார்.

இதன்போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்ட உறவுகளை நினைவு கூர்ந்து மலர் வளயத்தை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதேவேளை, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக்கல் பொம்பியோ, இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சந்தித்ததுடன், இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவையம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

Author: TELO Admin