Hot News
Home » செய்திகள் » கொலைக்குற்றவாளி துமிந்த சில்வாவை விடுதலை செய்ய கோரும் கடிதத்தில் இருந்து கையெழுத்தை வாபஸ் பெறுவதாக மனோ கணேசன் அறிவிப்பு

கொலைக்குற்றவாளி துமிந்த சில்வாவை விடுதலை செய்ய கோரும் கடிதத்தில் இருந்து கையெழுத்தை வாபஸ் பெறுவதாக மனோ கணேசன் அறிவிப்பு

துமிந்த சில்வாவை விடுதலை செய்யுமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை கடிதத்திலிருந்து தமது கையெழுத்தை வாபஸ் பெறுவதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அறிவித்துள்ளார்.

மனோ கணேசன் உள்ளிட்ட சில சிறுபான்மையின கட்சிகளின் எம்.பிக்களும் இந்த மகஜரில் கையெழுத்து வைத்தது, பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி, பரவலான விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் தனது முன்னைய முடிவிலிருந்து விலகுவதாக மனோ கணேசன் அறிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

Author: TELO Admin