Hot News
Home » செய்திகள் » கவிஞர் ஜெயபாலன் நாடு கடத்தப்படவுள்ளார்? – குடிவரவு குடியகல்வு திணைக்களம்

கவிஞர் ஜெயபாலன் நாடு கடத்தப்படவுள்ளார்? – குடிவரவு குடியகல்வு திணைக்களம்

விசா விதி முறைகளை மீறி செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தற்சமயம் மிரிஹான முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நோர்வே பிரஜையான ஈழத்து கவிஞர் வி.ஜ.எஸ்.ஜெயபாலன் நாடு கடத்தப்படவுள்ளாரென குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தென்னிந்திய திரைப்பட நடிகர் ஜெயபாலன் கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா – மாங்குளம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

சுற்றுலா விசாவில் இலங்கை வந்த நோர்வே பிரஜை ஜெயபாலன், விசா விதிமுறைகளை மீறி பிரிவினையைத் தூண்டி யாழ்ப்பாணத்தில் கூட்டங்களை நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தனது தாயின் சமாதியைப் பார்க்கப்போனதால்தான் கவிஞர் ஜெயபாலன் இலங்கையில் கைது செய்யப்பட்டதாக தான் நம்புவதாக அவரது மனைவி வாசுகி தெரிவித்துள்ளார்.

மேலும், அவரது கைதுக்காக இலங்கை அரசாங்கம் வேறு காரணங்களைக் கூறினாலும், தனது வீட்டில் உள்ள தனது தாயின் சமாதியைப் பார்க்க்போனதற்காகவே அவர் கைது செய்யப்பட்டதாக தான் நம்புவதாக வாசுகி தெரிவித்துள்ளார்.

Author: TELO Media Team 1