Hot News
Home » செய்திகள் » ஜெயபாலன் பிரபாகரனின் ஆஸ்தான கவிஞர்களில் ஒருவர்!– திவயின செய்தி

ஜெயபாலன் பிரபாகரனின் ஆஸ்தான கவிஞர்களில் ஒருவர்!– திவயின செய்தி

மாங்குளம் பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட ஜெயபாலன், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஆஸ்தான கவிஞர்களில் ஒருவர் என திவயின செய்தி வெளியிட்டுள்ளது.

வீசா விதிகளை மீறிச் செயற்பட்டதாகத் தெரிவித்து கவிஞர் ஜெயபாலனை இலங்கை பாதுகாப்பு தரப்பினர் கைது செய்து தடுத்து வைத்து விசாரணை செய்திருந்தனர். பின்னர் நாடு கடத்தப்பட்டிருந்தார்.

பிரபாகரனின் உத்தியோகபூர்வ கவிஞர் குழாமின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக ஜெயபாலன் கடமையாற்றியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

2008ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 2ம் திகதி தமிழகத்தின் சென்னையில் நடைபெற்ற ஈழ ஆர்ப்பாட்டமொன்றில் ஜெயபாலன் பங்கேற்றிருந்தார்.

இலங்கைக்கு ஆயுதங்களை வழங்க வேண்டாம் என அவர் இந்திய அதிகாரிகளிடம் கோரியிருந்தார்.

1988ம் ஆண்டு நோர்வேயில் ஜெயபாலனுக்கு குடியுரிமை வழங்கப்பட்டது.

பிரபாகரனின் ஆஸ்தான கவிஞரான புதுவை ரத்தினதுரை மற்றும் ஜெயபாலன் ஆகியோர் ஒன்றாக இணைந்து செயற்பட்டுள்ளனர்.

வீசா சட்டங்களை மீறிச் செயற்பட்ட கவிஞர் ஜெயபாலனை கைது செய்தமைக்காக புலி ஆதரவு வெளிநாட்டு புலம்பெயர் தரப்பு கடும் அதிருப்தியை வெளியிட்டு வருவதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது.

Author: TELO Media Team 1