Hot News
Home » செய்திகள் » வடமாகாணத்துக்கு புதிய உதவி பொலிஸ் அதிபர் நியமிப்பு குறித்து தமிழ்தேசியக்கூட்டமைப்பு அதிருப்தி

வடமாகாணத்துக்கு புதிய உதவி பொலிஸ் அதிபர் நியமிப்பு குறித்து தமிழ்தேசியக்கூட்டமைப்பு அதிருப்தி

நாடாளுமன்றத்தில் நேற்று இந்த அதிருப்தியை எம் ஏ சுமந்திரன் வெளியிட்டார்
அரசியல் யாப்பின்படி புதிய வடக்கு மாகாணத்துக்கு புதிய உதவி பொலிஸ் அதிபரை நியமிக்கும் போது அது தொடர்பில் வடமாகாண முதலமைச்சருடன் கலந்தாலோசிக்கப்படவேண்டும்
புதிய உதவி பொலிஸ் அதிபரை நியமிப்பதில் எவ்வித பிரச்சினைகளும் இல்லை
எனினும் அந்த நியமனம் குறித்து மாகாண முதலமைச்சரிடமும் கலந்தாலோசிக்கப்படவேண்டும் என்று சுமந்திரன் கூறினார்
இதேவேளை வடமாகாண பிரதம செயலாளரை நீக்குமாறு வடமாகாண முதலமைச்சர் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்
எனினும் இரண்டு மாதங்களாகியும் அதற்கு பதில் வரவில்லை
அத்துடன் வடமாகாண ஆளுநரை நீக்குமாறு தமிழ்தேசிக்கூட்டமைப்பு யோசனை நிறைவேற்றியுள்ளமையையும் அவர் சுட்டிக்காட்டினார்

Author: TELO Media Team 1