Hot News
Home » செய்திகள் » பிரித்தானிய பிரஜை கொலை வழக்கின் சந்தேக நபருக்கு நீதிமன்றம் பிடியாணை

பிரித்தானிய பிரஜை கொலை வழக்கின் சந்தேக நபருக்கு நீதிமன்றம் பிடியாணை

பிரித்தானிய பிரஜையான குராம் ஷேக் கொலை வழக்கின் சந்தேக நபரான தங்காலை பிரதேச சபைத் தலைவர் சம்பத் வித்தான பத்திரணகேவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்பதால் அவருக்கு இன்று இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. குராம் ஷேக் கொலை வழக்கில் இன்று ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ரஷ்ய காதலியுடன் விடுமுறைகளை கழிப்பதற்காக இலங்கை வந்து தங்காலையில் விடுதியொன்றில் தங்கியிருந்த போது குராம் ஷேக் கொலை செய்யப்பட்டார். அத்துடன் அவரது ரஷ்ய காதலி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார்.

தங்காலை மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த இந்த கொலை வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதுடன், சட்டமா அதிபர் தங்காலை பிரதேச சபை தலைவர் உட்பட சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.

Author: TELO Media Team 1