Hot News
Home » செய்திகள் » அமெரிக்கத் தூதரகத்திடம் விளக்கம் கோரப்படும்: அரசாங்கம்

அமெரிக்கத் தூதரகத்திடம் விளக்கம் கோரப்படும்: அரசாங்கம்

அமெரிக்கத் தூதரகத்திடம் விளக்கம் கோரப்படும் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இறுதிக் கட்ட போரின் போது ஆயிரக்கணக்கான சிவிலியன்கள் இராணுவத்தின் ஷெல் தாக்குதல்களுக்கு இலக்காகி கொல்லப்பட்ட இடத்தை அமெரிக்க அதிகாரிகள் பார்வையிட்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவின் போர்க்குற்றச் செயல் தொடர்பான விசேட பிரதிநிதி ஸ்டீவன் ரெப் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சல் சிசன் ஆகியோர் இன்று வன்னிக்கு சென்றிருந்தனர்.

குறித்த அதிகாரிகளின் வன்னி விஜயம் பற்றிய டுவிட் குறிப்பு படங்களுடன் அமெரிக்கத் தூதரக உத்தியோகபூர்வ டுவிட் கணக்கில் வெளியிடப்பட்டிருந்தது.

இதில் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்களை இராணுவத்தினர் ஷெல் தாக்குதல் மூலம் கொலை செய்த இடத்தை அமெரிக்க அதிகாரிகள் பார்வையிட்டதாக டுவிட் செய்யப்பட்டிருந்தது.

அமெரிக்க தூதரகத்தின் இந்த டுவிட் கருத்து குறித்து விளக்கம் கோரப்பட உள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

அமெரிக்கத் தூதரகத்தின் இந்தக் கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என தெரிவித்துள்ளது.

அதிகாரிகளின் வன்னி விஜயத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்ட டுவிட் கருத்துக்கள் குறித்து விளக்கம் கோரப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதேவேளை இலங்கை சென்றுள்ள அமெரிக்காவின் விசேட பிரதிநிதியான ஸ்டீபன் ஜே. ராப், இறுதிக்கட்ட போர் நடைபெற்ற போர் தவிர்ப்பு வலய பகுதிக்கு விஜயம் செய்துள்ளார்.

இலங்கைகக்கான அமெரிக்க தூதுவர் மைக்கல் ஜே. சீசனுடன் சென்ற ராப், புதுக்குடியிருப்பில் இயங்கிய ஐ.நா அலுவலகம், புதுமாத்தளனில் இருக்கும் பாடசாலை மற்றும் வைத்தியசாலைக்கு விஜயம் செய்து பார்வையிட்டார்.

2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்டப் போரின் போது செல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட புனித அந்தோணியார் மைதானத்திற்கும் ராப் விஜயம் செய்தாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

Author: TELO Media Team 1