Hot News
Home » செய்திகள் » இலங்கை இந்திய மீனவர்கள் உடனடியாக விடுவிக்கப்படவுள்ளனர் – ராஜித

இலங்கை இந்திய மீனவர்கள் உடனடியாக விடுவிக்கப்படவுள்ளனர் – ராஜித

தமது நாடுகளில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்க இலங்கையும் இந்தியாவும் இணங்கியுள்ளன

இலங்கையின் மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்
இந்த விடுதலை இன்று முதல் அமுலாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்

இதற்கான உத்தரவை தாம் இலங்கையின் மீன்பிடித்துறை திணைக்களத்துக்கு விடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்

இந்தியாவி;ல் தடுத்து வைக்கப்பட்டிருந்த நான்கு படகுகளுடன் 160 மீனவர்கள் விடுவிக்கப்படவுள்ளனர்

இதற்கு பதிலாக இலங்கைää இந்தியாவின் 236 மீனவர்களையும் 90 படகுகளையும் இலங்கை விடுவிக்கவுள்ளது என்று இந்திய விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார் தெரிவித்துள்ளார்

இரண்டு நாட்டு அமைச்சர்களுக்கும் இடையில் புதுடில்லியில் நடைபெற்ற பேச்சுசுவார்த்தையை அடுத்து இந்த விடுவிப்புகள் சாத்தியமாகியுள்ளன

இந்த பேச்சுவார்த்தையின் போது இந்திய மீனவர்களின் அத்துமீறில் காரணமாக இலங்கை மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அமைச்சர் ராஜித சேனாரத்ன சுட்டிக்காட்டினார்

இலங்கையின் கடற்பகுதிக்கு நாள் ஒன்றுக்கு 1200 இந்திய படகுகள் அத்துமீறி நுழைவதாக அமைச்சர் குறிப்பிட்டார்

இந்தநிலையில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை களைவதற்காக இரண்டு நாட்டு அதிகாரிகளை உள்ளடக்கிய 6 பேர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது

இந்தக்குழு தமது முதலாவது கூட்டத்தை இன்று நடத்துகிறது

அத்துடன் இரண்டு நாடுகளுக்கு இடையிலும் மீனவர் பிரச்சினையை தீர்க்க பொறிமுறை ஒன்று ஏற்படுத்தப்படவுள்ளது

இதேவேளை அமைச்சர் ராஜித சேனாரத்ன இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஸித்தை சந்திக்கவுள்ளார்

Author: TELO Media Team 1