Hot News
Home » செய்திகள் » தமிழர்களின் பாதுகாப்புக்கும் சகவாழ்வுக்கும் உறுதிப்பாட்டை வழங்குவதாக ஜனாதிபதி அறிவிப்பு

தமிழர்களின் பாதுகாப்புக்கும் சகவாழ்வுக்கும் உறுதிப்பாட்டை வழங்குவதாக ஜனாதிபதி அறிவிப்பு

இலங்கையில் தமிழர்களின் பாதுகாப்பு மற்றும் சகவாழ்வுக்கு தாம் உறுதியளிப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற தைப்பொங்கல் விழாவில் பங்கேற்ற ஜனாதிபதி, சிலர் இனவாதத்தை தூண்டிவிட்டு நாட்டை சீரழிக்க முயற்சிப்பதாக குற்றம் சுமத்தினார்.

இனவாதத்தை தூண்டுவது இலேசான காரியம் என்ற வகையில் சிலர் செய்யும் இந்த காரியம் காரணமாக அரசாங்கத்தின் பெயருக்கே களங்கம் ஏற்படுகிறது என்று குறிப்பிட்டார்.

போர் முடிவடைந்த பின்னர் இலங்கையில் சமாதானமே உருவாக வேண்டும். வெறுப்புக்களுக்கு இடம்தரக்கூடாது.

இலங்கையின் எதிர்க்கட்சியினால் உண்மையில் நோக்கத்தை எய்த முடியவில்லை. எனவே அபிவிருத்தியை கூட அவர்கள் விமர்சிக்கிறார்கள்.

இந்தநிலையில் மக்களை காப்பது தமது கடமை என்பதை தாம் மறந்து போகவில்லை என்று ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

Author: TELO Media Team 1