Hot News
Home » செய்திகள் » இலங்கை படையினருக்கு பிரேசில் பயிற்சியளிக்கவுள்ளது – பிரேசில் ஊடகம்

இலங்கை படையினருக்கு பிரேசில் பயிற்சியளிக்கவுள்ளது – பிரேசில் ஊடகம்

இலங்கையின் படையினருக்கு பயிற்சியளிக்க பிரேசில் முன்வந்துள்ளது
இலங்கையின் பாதுகாப்பு செயலாளருக்கும் பிரேசிலின் பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பின் போது இதற்கான உடன்பாடு எட்டப்பட்டுள்ளது

இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவும் பிரேசிலின் பாதுகாப்பு அமைச்சர் செல்சோ அமோரிமும் நேற்று இராணுவ பயிற்சி பரிமாற்றம் மற்றும் தொழில்நுட்ப கைத்தொழில் ஒத்துழைப்பு ஆகிய விடயங்கள் தொடர்பில் உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திட்டதாக பிரேசிலின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன

இதன்போது கருத்துரைத்த பிரேசிலின் பாதுகாப்பு அமைச்சர் இந்த உடன்படிக்கையின்படி 2015 ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு யுத்தக்கல்லூரி வனப்பகுதிகளில் யுத்த பயிற்சி என்பவற்றை பிரேசிலினால் வழங்கமுடியும் என்று குறிப்பிட்டார்
இதேவேளை இலங்கையினால் நடத்தப்படும் பயிற்சி நிகழ்ச்சி திட்டங்களில் பிரேசிலின் அதிகாரிகள் பங்கேற்பர்

குறித்த நிகழ்வில் உரையாற்றிய கோட்டாபய ராஜபக்ச இலங்கை ஆபிரிக்க நாடுகளுடனும் பிரேசிலுடனும் இருதரப்பு உறவுகளை பலப்படுத்திக்கொண்டிருப்பதாக குறிப்பிட்டார் என்று பிரேசிலின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன

எனினும் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு இந்த செய்தியை இதுவரை உறுதிசெய்யவில்லை

Author: TELO Media Team 1