Hot News
Home » செய்திகள் » அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல மீது ஊழல் மோசடிக் குற்றச்சாட்டு!

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல மீது ஊழல் மோசடிக் குற்றச்சாட்டு!

இலங்கையின் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஊழல் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தனிப்பட்ட பயன்பாட்டுக்காக, அரச பணத்தில் ஊடக அமைச்சர் வாகனமொன்றை கொள்வனவு செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திலிருந்து 3.3 மில்லியன் ரூபா பணத்தைப் பெற்றுக்கொண்டு அமைச்சர் கெஹலிய வாகனம் ஒன்றை கொள்வனவு செய்துள்ளார்.

இந்த வாகனத்தை அவர் தனது சொந்த பயன்பாட்டிற்காக பயன்படுத்தி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

2010ம் ஆண்டு ஜூலை முதல் 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரையில் தலா 240,000 ரூபாவினை இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திடமிருந்து பெற்றுக்கொண்டுள்ளார்.

அமைச்சரின் சொந்தப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் வாகனத்திற்கு இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் பணம் செலுத்த முடியாது என சுட்டிக்காட்டப்படடுள்ளது.

அண்மையில் பதவியை ராஜினாமா செய்த ரூபாவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மொஹான் சமரநாயக்கவிடமும் வாகனமொன்றை பெற்றுக்கொள்ள அமைச்சர் முயற்சித்தள்ளதாகவும், அதனை மொஹான் சமரநாயக்க நிராகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சரின் அழுத்தம் காரணமாகவே மொஹான் சமரநாயக்க பதவி விலகியதாகவும் குறிப்பிடப்படுகிறது.

Author: TELO Media Team 1