Hot News
Home » செய்திகள் » தமிழக மீனவர்கள் தீக்குளிக்கப் போவதாக எச்சரிக்கை

தமிழக மீனவர்கள் தீக்குளிக்கப் போவதாக எச்சரிக்கை

தமிழக மீனவர்கள் தீக்குளிக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கை கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகுகளை மீட்டுத்தர அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியுள்ளனர்.

படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் தீக்குளிக்கப் போவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தின் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

150க்கும் மேற்பட்ட மீனவர்கள் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்கப் போவதாக அச்சுறுத்தியுள்ளனர்.

குறித்த மீனவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

தீக்குளிக்க முயற்சித்த ஆறு பேர் பாதிக்கப்பட்டதாகவும் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் சுமார் 200 படகுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பளையில் 4 இந்தியர்கள் கைது

சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருந்து வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட 4 இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் வடக்கு மாகாணத்தின் பளை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இந்திய பிரஜைகள் சுற்றுலா வீசா அனுமதியில் வந்து இலங்கையில் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.

Author: TELO Media Team 1