Hot News
Home » செய்திகள் » மேல் மாகாணத்தில் அர்ஜூன ரணதுங்கவை களமிறக்கும் முயற்சியில் ஐ.தே.க

மேல் மாகாணத்தில் அர்ஜூன ரணதுங்கவை களமிறக்கும் முயற்சியில் ஐ.தே.க

எதிர்வரும் மேல் மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்கவை நிறுத்துவது குறித்து ஐக்கிய தேசியக் கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

அர்ஜூன ரணதுங்கவின் சகோதரரான பிரசன்ன ரணதுங்கவை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தாவிட்டால் மட்டுமே, ஐக்கிய தேசியக் கட்சியின் யோசனை குறித்து பரிசீலிக்க முடியும் என அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

பிரசன்ன ரணதுங்கவை ஆளும் கட்சி முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தினால் தன்னால் தேர்தலில் போட்டியிட முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், அர்ஜூன ரணதுங்க மேல் மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட மறுத்தால், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ரோசி சேனாநாயக்கவை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவது என அந்த கட்சி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Author: TELO Media Team 1