Hot News
Home » செய்திகள் » கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் அவசர சந்திப்பு

கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் அவசர சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சவிற்கும் இடையில் அவசர சந்திப்பொன்று நடத்தப்பட உள்ளது.

வடக்கின் தற்போதைய நிலைமை, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தல், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாடு போன்றன தொடர்பில் விசேட சந்திப்பு நடத்தப்பட உள்ளது.

இந்த வாரத்தில் இரு தரப்புக்கும் இடையில் சந்திப்பு நடத்தப்பட உள்ளது.

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் பெப்ரவரி மாத முதல் வாரத்தில் இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.

இந்திய உயர் மட்ட அரசியல் தலைவர்களுடன் சம்பந்தன் தலைமையிலான பிரதிநிதிகள் குழு சந்திப்பு நடாத்த உத்தேசித்துள்ளது.

இந்த சந்திப்பிற்கு முன்னதாக ஜனாதிபதியுடன் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடாத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author: TELO Media Team 1