Hot News
Home » செய்திகள் » தென் மாகாண முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் ஆளும் கட்சிக்குள் கடும் போட்டி

தென் மாகாண முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் ஆளும் கட்சிக்குள் கடும் போட்டி

தென் மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது தொடர்பில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இரு தரப்பினருக்கு இடையில் போட்டி ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜேலால் டி சில்வாவுக்கே இம்முறையும் அந்த பதவியை வழங்க வேண்டும் என நேற்று அம்பாலங்கொடையில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றின் சிரேஷ்ட அமைச்சர் பியசேன கமகே வலியுறுத்தியுள்ளார்.

விஜேலால் டி சில்வா முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில் முக்கியமான பணிகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை தென் மாகாண சபையின் முன்னாள் கல்வியமைச்சரான சந்திம ராசபுத்ர முதலமைச்சர் வேட்பாளராக முன்நிறுத்தப்பட வேண்டும் என அமைச்சர் டளஸ் அழகபெரும கடும் அழுத்தங்களை பிரயோகித்து வருகிறார்.

இந்த நிலையில், சந்திம ராசபுத்ரவை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரியவருகிறது.

Author: TELO Media Team 1