Hot News
Home » செய்திகள் » எம்மை புரிந்து கொள்ளாத சில சக்திகள் அழுத்தங்களை பிரயோகிக்கின்றன!– அபுதாபியில் ஜனாதிபதி மஹிந்த தெரிவிப்பு

எம்மை புரிந்து கொள்ளாத சில சக்திகள் அழுத்தங்களை பிரயோகிக்கின்றன!– அபுதாபியில் ஜனாதிபதி மஹிந்த தெரிவிப்பு

இலங்கை அரசாங்கம் தொடர்பிலான யதார்த்தத்தை புரிந்து கொள்ளாதவர்கள் தம்மீது பாரிய அழுத்தங்களை பிரயோகித்து வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

தமது அரசாங்கத்தினால் எந்தவொரு சவால்களையும் முறியடிக்க முடியும் என்றும், வெளிதரப்பினரின் அழுத்தங்கள் அதற்கு தடையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் வைத்து, ஐஸ்லாந்து ஜனாதிபதி ஒலாஃபூர் ரங்னார் கிரிமிசனை சந்தித்து பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிடடார்.

நிலக்கண்ணிவெடிகளை அகற்றி வடக்கில் அபிவிருத்திகளை முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஐஸ்லாந்து ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளதாக ஐஸ்லாந்து ஜனாதிபதி குறிப்பிட்டு;ள்ளார்.

ஜனாதிபதி தமது ஐக்கிய அரபு விஜயத்தை நிறைவு செய்துகொண்டு நாளை நாடுதிரும்பவுள்ளதாக அவரது ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது.

Author: TELO Media Team 1