Hot News
Home » செய்திகள் » ஆளும் கட்சியின் தென் மாகாணசபை உறுப்பினர் ஐ.தே.கவில் இணையத் தீர்மானம்

ஆளும் கட்சியின் தென் மாகாணசபை உறுப்பினர் ஐ.தே.கவில் இணையத் தீர்மானம்

ஆளும் கட்சியின் தென் மாகாணசபை உறுப்பினர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளத் தீர்மானித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தென் மாகாணசபை உறுப்பினர் ஆனந்த பத்மசிறி காரியவசம் இவ்வாறு, ஆளம் கட்சியை விட்டு விலகி ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளத் தீர்மானித்துள்ளார்.

இதற்கு முன்னர் ஆளும் கட்சியின் தென் மாகாணசபை உறுப்பினர் ஜஸ்டின் கலப்பத்தியும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய தேசியக் கட்சியின் வஜிர அபேவர்தன மற்றும் கட்சித் தலைமையினால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ளதாக காரியவசம் தெரிவித்துள்ளார்.

எனது அரசியல் பயணத்திற்கு அரசாங்கம் உரிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Author: TELO Media Team 1