Hot News
Home » செய்திகள் » பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஆளும் கட்சியின் பிரதேச சபை தலைவர் கைது

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஆளும் கட்சியின் பிரதேச சபை தலைவர் கைது

2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரித்தானிய பிரஜையான குர்ரம் ஷேக்கின் கொலை தொடர்பில் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட தங்காலை பிரதேச சபையின் தலைவர் சம்பத் விதான பத்திரன கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பின் புறநகர் கோட்டே பகுதியில் அவர் இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜனவரி 9ம் திகதியன்று கொழும்பு மேல்நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சம்பத் விதான பத்திரனவுக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது.எனினும் அவர் அன்று சமுகமளிக்காமை காரணமாக பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்தநிலையிலேயே சம்பத் விதான பத்திரன கைது செய்யப்பட்டுள்ளார்.

Author: TELO Media Team 1