Hot News
Home » செய்திகள் » சீன பாதுகாப்பு அமைச்சர் லியன் குவாங்லி மகிந்தராஜபக்ஸவைச் சந்தித்தார்

சீன பாதுகாப்பு அமைச்சர் லியன் குவாங்லி மகிந்தராஜபக்ஸவைச் சந்தித்தார்

இலங்கைக்கு 5 நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள சீன பாதுகாப்பு அமைச்சர் லியன் குவாங்லி தலைமையிலான பிரதிநிதிகள் நேற்று மாலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்தனர்.இந்த சந்திப்பில் சீன அரசாங்கத்தின் உயர் பாதுகாப்பு அதிகாரிகள், வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், தனியார் போக்குவரத்து அமைச்சர் சீ.பி.ரத்நாயக்க, ஜனாதிபதியின் பணிக்குழுவின் தலைமை அதிகாரி காமினி செனரத், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம,  பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி ரொஷான் குணதிலக்க உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். இந்த சந்திப்பை அடுத்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, ஈரானில் நடைபெறும் அணிசேரா நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டுச் சென்றார்.

Author: TELO Admin