Hot News
Home » செய்திகள் » காணாமல் போனோர் தினத்தையொட்டி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

காணாமல் போனோர் தினத்தையொட்டி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

காணாமல் போனோர் தினத்தையொட்டி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மனிதாபிமான அமைப்புக்களின் ஏற்பாட்டில் வவுனியாவில் இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.  வவுனியா பஸ் நிலையத்திற்கு முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் காணாமல் போனோர் தொடர்பான விவரங்களை இலங்கை அரசாங்கம் உடனடியாக வெளியிட வேண்டுமென ஆர்ப்பாட்டக்காரர்கள்  வலியுறுத்தினர்.காணாமல் போனோரின் உறவினர்கள் காலை 9.30 மணிக்கு வவுனியா கண்டி வீதியிலுள்ள பௌத்த விகாரையில் வழிபாடுகளை முடித்துவிட்டு ஊர்வலமாக கண்டி வீதி வழியாகச் சென்று குடியிருப்பு பிள்ளையார் கோவிலிலும்; இறம்பைக்குளம் அந்தோனியார் தேவாலாயத்திலும் பஜார் வீதியிலுள்ள பள்ளிவாசலிலும் வழிபாடுகளில் ஈடுபட்டனர். பின்னர் இவர்கள் வவுனியா பஸ் நிலையத்தை வந்தடைந்து ஆர்ப்பாட்டத்தில் இணைந்துகொண்டனர்.

Author: TELO Admin