Hot News
Home » செய்திகள் » ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு திரட்டிய பெண்கள் மீது ஏறாவூரில் தாக்குதல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு திரட்டிய பெண்கள் மீது ஏறாவூரில் தாக்குதல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் ஐயங்கேணி பிரதேசத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முதன்மை வேட்பாளர் ஹாபிஸ் நஸீர் அஹமத்திற்கு ஆதரவு திரட்டி பெண்களை சந்திப்பதற்காக வீடு வீடாகச் சென்ற நாற்பது பெண்கள் மீது இனம் தெரியாத குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன்போது பாதிப்புக்குள்ளான மூவர் ஏறாவூர் ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். திடீர் தாக்குதலின் விளைவாக அதிர்ச்சிக்குள்ளாகி சுய நினைவு இழந்திருந்த பெண்களில் சிலருக்கு அவசர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டன. இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பொறுப்பான உதவித் தேர்தல் ஆணையாளருக்கும் தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Author: TELO Admin