Hot News
Home » செய்திகள் » கிழக்கு மாகாண சபையில் ஆளும் கட்சியினால் தனித்து ஆட்சியமைக்க முடியும்: பைசர்

கிழக்கு மாகாண சபையில் ஆளும் கட்சியினால் தனித்து ஆட்சியமைக்க முடியும்: பைசர்

கிழக்கு மாகாணத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினால் தனித்து ஆட்சியமைக்க முடியும் ௭ன்று நம்புகின்றோம். கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈழக் கனவுடனேயே பிரசாரம் செய்துவருகின்றது ௭ன்று பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் கூறியதாவது கிழக்கில் சில கட்சிகள் இனவாத ரீதியில் பிரசாரங்களை மேற்கொண்டுவந்தாலும் கிழக்கு மாகாண சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் புத்திசாலிகள். அவர்கள் சகவாழ்வுடன் வாழ்ந்துவருகின்றனர். அந்த வகையில் கிழக்கு மக்கள் தீர்க்கமான முடிவை தேர்தலில் ௭டுப்பார்கள். கிழக்கில் சில கட்சிகள் இனவாதத்தைப் பரப்பும் வகையில் பிரசாரம் செய்துவருகின்றன. முஸ்லிம் கட்சிகளும் இவ்வாறே செயற்பட்டுவருகின்றன. ஆனால் இனவாதத்தைக் கிழக்கு மக்கள் நிராகரிக்கின்றனர். மேலும் தமிழ் மக்கள் ஆளும் கட்சிக்கு வாக்களிப்பதற்குத் தயாராக இருக்கின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இனவாதமும் மக்களினால் நிராகரிக்கப்படும். இதேவேளை கிழக்கில் தேர்தலின் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால் தனித்து ஆட்சியமைக்க முடியும் ௭ன்று நாங்கள் நம்புகின்றோம்.

Author: TELO Admin