Hot News
Home » செய்திகள் » அரசாங்கத்தில் தொடர்ந்தும் இருப்பதா என்பது கிழக்கு மாகாண சபை தேர்தலின் பின்னர் தீர்மானிக்கப்படும்

அரசாங்கத்தில் தொடர்ந்தும் இருப்பதா என்பது கிழக்கு மாகாண சபை தேர்தலின் பின்னர் தீர்மானிக்கப்படும்

அரசாங்கத்தில் தொடர்ந்தும் இருப்பதா இல்லையா என்பது குறித்து  கிழக்கு மாகாண சபை தேர்தல் முடிந்த பின்னர் தீர்மானிக்கப்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் சபை உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம். ஹரிஸ் தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும் இது குறித்து இன்னும் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இம்முறை கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதால், மாகாணத்தில் உள்ள முஸ்லிம் மக்களின் ஏகோபித்த ஆதரவு கிடைத்துள்ளது. காங்கிரஸ் தனித்து போட்டியிடுவது குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் விரிவாக கலந்துரையாடியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளார்.

Author: TELO Admin