Hot News
Home » செய்திகள் » உயிரிழந்த உறவுகளை உணர்வு பூர்வமாக நினைவு கூருவது என்பது ஒவ்வொரு மனிதனதும் சமயம், நம்பிக்கை சார்ந்த விடயமாகும்

உயிரிழந்த உறவுகளை உணர்வு பூர்வமாக நினைவு கூருவது என்பது ஒவ்வொரு மனிதனதும் சமயம், நம்பிக்கை சார்ந்த விடயமாகும்

அதிகார வேட்டையின் அவலத்துக்குப் பலியாகிய தமிழர் தம் நினைவுகளையே தேசத்துரோகமாக நினைக்கும் இந்த அரசுதான் தன்னோடு பேசுவதுமூலம் ஈழம் தவிர்ந்த எல்லாவற்றையும் எம் தமிழர்களுக்குத் தருவார்களாம் என கிழக்கு மாகாண சபை உறு;பபினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா) தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் நினைவுகள் குறித்து எழுந்துள்ள சிக்கல் நிலை, அதன் விளைவுகள் குறித்துக் கேட்கப்பட்டு போதே இதனை அவர் தெரிவித்தார்.

தொடரடந்து கருத்துத் தெரிவித்த அவர்,

தமிழனாகப்பிறப்பது, தமிழராக வாழ்வது, தமிழனாக மரணிப்பது, மரணித்த தமிழனை நினைவு கூருவது யாவற்றையும் துரோகமாகப் பார்க்கும் நிலையே இன்றைய எமது நாட்டின் நிதர்சனமாகும்.

தமிழ் மக்களின் உணர்வுகளுக்கும் அரச அடக்கு முறைகளுக்கும் இடையே  ஏற்படும் முரண்பாடுகளாகவே கடந்த பல வருடங்களாக மே மாதம் விளங்கி வருகிறது.

மே மாதம் ஆரம்பமானதுமே அரச தரப்பும் அரச தரப்பின் பேசவல்ல அமைச்சர்களும், அதிகாரிகள், படைத்தரப்பு யாவரும் தமது அகோர முகங்களையும் தமது அடக்கு முறை நடவடிக்கைகளையும் கட்டவிழ்க்க தொடங்கிவிடுவர்.

வழமையை விட இந்த வருட மே மாதம் மிக மோசமாக அரசதரப்பு அடக்கு முறைக் கருத்துக்களைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. அரச தரப்பின் மௌனம் இந்த மௌனத்தை அங்கீகாரமாக எண்ணி படைத்தரப்பின் எந்த நிலை அதிகாரியும், தமிழ் மக்களது உணர்வுகளை நசுக்கும் எக்கருத்துக்களையும் வெளியிடலாம். இதைவிட அமைச்சரவைப் பேச்சாளர், நாட்டில் இயங்கிவரும் பல்வேறு சேனாக்களின் மதகுருமார் உட்பட பிரமுகர்கள், எவரும் தமிழர் உணர்வுகளை எவ்விதமாகவும் சீண்டிப்பார்க்க முடியும்.

மத நல்லிணக்கத்துக்கோ, இன நல்லிணக்கத்திற்கோ, சமூக நல்லிணக்கத்துக்கோ சவால் விடக்கூடிய அல்லது முரண்பாடுகளை ஏற்படுத்தக்கூடிய எக் கருத்துக்களையும் இவர்கள் கூறுவது அவர்களது அர்த்தத்தில் தேசாபிமானம். மாறாக நமது உரிமைகளை, உணர்வுகளை அமைதியாக வெளிப்படுத்துவது தேசத்துரோகம்.

மரணித்த உறவுகளை வீட்டில் நினைவுகூருங்கள் என்றது ஒரு பிரிவு. மரணித்த தமிழர் உறவுகளை மேமாதத்தில் நினைவு கூருவதை அனுமதிக்கப் போவதில்லை என்கிறது ஒரு பிரிவு, இதன் மூலம் புலிகனை மீள உருவாக்கம் செய்ய முனைகிறார்கள் என்றது ஒரு பிரிவு. யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து ஏதிலிகளாக அரசு அறிவித்த இடப் பரப்பில் குவிந்த பல்லாயிரக்கணக்கான எம் தமிழர்கள் செல்வீச்சுக்கள், எறிகணைகள், கொத்துக் குண்டுகள் போன்ற ஆயுதங்களால் கொல்லப்பட்ட இடங்களில் தான் தம் உறவுகளை நினைவுகூரத் துடிக்கிறார்கள்.

உயிரிழந்த உறவுகளை உணர்வு பூர்வமாக நினைவு கூருவது  என்பது ஒவ்வொரு மனிதனதும் சமயம், நம்பிக்கை சார்ந்த விடயமாகும். இதனை மறுப்பது என்பது அரசியலமைப்பு எமக்கு வழங்கிய அடிப்படை உரிமையினது மீறல் என்பது மாத்திரமல்ல, சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் அப்பட்டமான மீறலாகும். இவ்வாறு அதிகார வேட்டையின் அவலத்துக்குப் பலியாகிய தமிழர் தம் நினைவுகளையே தேசத்துரோகமாக நினைக்கும் இந்த அரசுதான் தன்னோடு பேசுவதுமூலம் ஈழம் தவிர்ந்த எல்லாவற்றையும் எம் தமிழர்களுக்குத் தருவார்களாம்.

ஒன்று மட்டும் உண்மை எல்லாக்காலமும் எல்லோரையும் ஏமாற்றலாம் என்பது எந்Nநுரத்திலும் பொருந்தாது. அவ்வாறு பொருந்தாத காலம் வெகு தூரத்திலில்லை என்பது அண்மைக்கால உள்ளுர், சர்வதேச நடவடிக்கைகள் மூலமி; அவதானிக்க முடிகிறது.

இறுதியாக ஒன்று மட்டும் உண்மை அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்பதை எமது மண் நம்புகிறது. நாமும் நமது மக்களும் நம்புகிறோம். நம்பிக்கை மட்டும் தானே நமதுவாழ்வின் ஜீவ நாடி.

Author: TELO Admin