Hot News
Home » செய்திகள் » இராணுவ ஆட்சியினுடைய ஒட்டுமொத்த வடிவமாக யாழ்ப்பாண குடாநாடு காட்சியளித்து: – சிவாஜிலிங்கம்

இராணுவ ஆட்சியினுடைய ஒட்டுமொத்த வடிவமாக யாழ்ப்பாண குடாநாடு காட்சியளித்து: – சிவாஜிலிங்கம்

எத்தனை தடைகள் வந்தாலும் அத்தனை தடைகளும் உடைத்து நொறுக்கப்படும் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று மாலை 5.30 மணியளவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மரியன்னை (பெரியகோவில்) தேவாலயத்தில் மெழுகுதிரி ஏற்றி வழிபட்டனர். பின்னர் நல்லூர் வீரமாகாளி அம்மன் ஆலயத்திலும், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலும் கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து வழிபாட்டினை மேற்கொண்டிருந்தனர்.     நல்லூர் ஆலய வழிபாட்டை முடித்துக்கொண்டு ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.  அவர் மேலும் தெரிவிக்கையில்…  முற்றவெளியில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை கொல்லப்பட்ட அத்தனை உறவுகளுக்கும் தமிழ் மக்களுக்கும் வீர மறவர்களுக்கும் நாங்கள் நினைவஞ்சலி செலுத்துகின்ற இந்த நிகழ்வை தேவாலயத்திலும் ஆலயத்திலும் அனுஸ்டித்தோம். எத்தனை தடைகள் வந்தாலும் அத்தனை தடைகளும் உடைத்து நொறுக்கப்படும். இன்றைக்கு இராணுவ ஆட்சியினுடைய ஒட்டுமொத்த வடிவமாக யாழ்ப்பாண குடாநாடு காட்சியளித்து.  அதேபோல வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் மிகப்பெரிய அடக்கு முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டு இருந்தன. அத்தனை அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் இன்று கொல்லப்பட்ட அத்தனை லட்சோப லட்சம் தமிழ் மக்களுக்கும் வீர மறவர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலையும் வீர வணக்கத்தையும் தெரிவித்து கொள்கிறோம் என மேலும் தெரிவித்தார்.  அதேவேளை கூட்டமைப்பினர் நல்லூரில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போது 50க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் மேலங்கிகள் இன்றி அவர்களை சூழ காணப்பட்டதுடன் ஒரு இராணுவ வீரர் கையில் அர்ச்சனை தட்டுடனும் காணப்பட்டார். நேற்றைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஸ்டிக்கப்படாமல் தடுக்கும் நோக்குடன் ஆலயங்கள் தேவாலயங்கள் மற்றும் தமிழரசுக்கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகங்கள் என்பவற்றை சூழ நேற்றிரவு முதல் பெருமளவு இராணுவம் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந

Author: TELO Admin