Hot News
Home » செய்திகள் » இந்தியவீட்டுத் திட்டம் தொடர்பில் தவறான அபிப்பிராயங்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகிறது: வி.மகாலிங்கம்

இந்தியவீட்டுத் திட்டம் தொடர்பில் தவறான அபிப்பிராயங்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகிறது: வி.மகாலிங்கம்

பாதிக்கப்பட்ட மக்களிற்காக நல்லெண்ண அடிப்படையில் இந்திய அரசினால் வழங்கப்பட்டு இந்தியவீட்டுத் திட்டம் தொடர்பில் தவறான அபிப்பிராயங்கள் வெளிப்படுத்தப்பட்டு வருவதாக யாழிலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் வி.மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.
அத்தோடு இந்தவீட்டுத் திட்ட்டமானது இரு நாடுகளுக்கு இடையிலும் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரமே வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனைவிடுத்து இந்த வீட்டுத் திட்டம் கிடைத்ததற்கு யாரும் உரிமை கோரமுடியாதென்றும் குறிப்பிட்டுள்ளார்.

யாழிலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் நேற்றுக் காலை ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடைபெற்றது.

இதன் போது இடமாற்றமாகி செல்லும் இந்தியத் துணைத் தூவரின் அனுபவங்கள் மற்றும் சேவைகள் மற்றும் இந்திய விட்டுத் திட்டம் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இதன் போது இந்திய வீட்டுத் திட்டமானது தம்மாலே கிடைத்தது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபுறமும் இல்லை தம்மாலேயே கிடைத்தது என்று அரசின் பங்காளிக் கட்சியான ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சி மற்றொருபுறமுமாக முண்னுக்குப் பின் முரனாகத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இத்திட்டம் கொண்டு வரப்பட்டமை தொடர்பில் கேள்வி யெழுப்பப்பட்டபோதே மகாலிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்..

இந்தியவீட்டுத் திட்டம் தொடர்பில் தற்போது தப்பான அல்லது உண்மைக்குப் புறம்பான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அவ்வாறான தகவல்களிளோ அல்லது செய்திகளிலோ எந்தவித உண்மைகளோ நியாயங்களோ இல்லை.

இத்திட்டத்தின் ஆரம்பமாக ஆயிரம் வீடுகளை ஐந்து மாவட்டங்கிளலும் அமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு அதன் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இதன் இரண்டாம்
கட்டமாக 43 ஆயிரும் வீடுகளை அமைக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இங்கு இரண்டாம் கட்டத்தின் ஆரம்பமாக 26931 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

இதில் 10172 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் 16 654 வீடுகள் அமைக்கும் பணிகள் தற்பொதும் நடைபெற்று வருகின்றது.

இந்தவீட்டுத் திட்டங்களில் இந்தியாவினால் வழங்கப்படுகின்ற வீட்டுத் திட்டங்கள் ஆனது 250 சதுர அடிக்குகுறைவாக இருக்கக் கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளையில் இந்தியாவில் வழங்கப்படுகின்ற வீட்டுத் திட்டத்திற்கு 120 000 ருபா மட்டுமே வழங்கப்படும்.

ஆனால் இங்குபாதிக்கப்பட்ட பிரதேசம் என்பதனால் இத் திட்டத்தில் எந்தவொரு வீடுகட்டுவதானாலும் 550 சதுரஅளவுக்குக் குறைவாக இருக்கக் கூடாதென்று குறிப்பிடப்பட்டுள்ள அதேவேளையில் இதற்காக 550 000 ஆயிரம் ரூபா வழங்கப்படுகின்றது. இதற்கமையவே இத்திட்டம் அமையவேண்டும். ஆனால் இங்கு இதனையும் மீறிவீடுகள் அமைக்கப்படுகின்றது .இதனால் பயனாளிகள் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது கடனாளிகளாக மாற்றப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

இத்தகைய பாதிப்புக்களானது இந்தியவீட்டுத் திட்டத்தால் ஏற்பட்டதல்ல. .அதாவது அவர்களுடைய செயற்பாடகளினாலேயே ஏற்படுகின்றது என்பதை வெளிப்படுத்த வேண்டியிருக்கின்றது.

அதாவது இத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டதிற்கு மேலாக வீடுகளை அமைப்பதே பிரதான காரணமாகவே அமைகின்றது. இந்நிலையில் இத் திட்டத்தில் தவறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆகவே இத்திட்டம் கிடைக்கப் பெற்றவர்கள் தம்மைப் பாதிக்காதவகையிலையே செயற்பட வேண்டும்.

இவ்வாறு நாம் நல்லெண்ண அடிப்படையில் வழங்கிய இத் திட்டத்திற்கு யாரும் உரிமைகோர முடியாவிட்டாலும் இத் திட்டம் தொடர்பில் பலர் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

அதேவேளையில் இருநாட்டுகளின் தலைவர்களுக்கிடையிலுமே செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரமே இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மகாலிங்கம் மேலும் தெரிவித்தார்.

Author: TELO Media Team 1