Hot News
Home » செய்திகள் » வடமாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை வீட்டுக்குள் குவிந்த இராணுவம்

வடமாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை வீட்டுக்குள் குவிந்த இராணுவம்

புதன்கிழமை இன்று காலை 4 மணி தொடக்கம் கிளிநொச்சி திருநகரில் வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளையின் வீட்டை சுற்றிவளைத்து நின்ற இராணுவம் அவரையும், அவரது குடும்பத்தினரையும் காலைக் கடமைகளை கூடச் செய்ய முடியாதவாறு இடையூறு செய்துள்ளது.

காலை 8.30 மணிவரை அவர் வீட்டில் நிலை கொண்டிருந்த இராணுவம் வீட்டுக்குள் நுழைந்து குடும்பம் சம்பந்தப்பட்ட ஆவணங்களை பரிசோதித்த பின் சென்றுள்ளனர்.

இவ்வாறுதான் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கிராமங்களில் இராணுவம் அதிகாலையில் வீடுகளுக்குள் நுழைகின்றது.

காலை வேளைகளில் தமிழ் இளம் பெண்கள், குடும்ப பெண்கள் தமது இரவு ஆடையுடன் வீட்டில் உறங்கும் வேளைகளில், இராணுவம் அதிகாலைகளில் வீடுகளுக்குள் புகுந்த பரிசோதனை என்ற பேரில் சிரமங்களையும் அசௌகரியங்ளையும் ஏற்படுத்தி வருகின்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Author: TELO Media Team 1