Hot News
Home » செய்திகள் » அதிகாரப் பரவலாக்கம் நாட்டின் அபிவிருத்தியை வேகமாக்கும்: லக்ஷ்மன் கிரியெல்ல

அதிகாரப் பரவலாக்கம் நாட்டின் அபிவிருத்தியை வேகமாக்கும்: லக்ஷ்மன் கிரியெல்ல

நாட்டில் அதிகாரத்தை பரவலாக்கினால் நாட்டின் அபிவிருத்தி வேகமடையும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.

இந்தியாவில் ஏற்பட்டுள்ள அதிகார மாற்றத்தினால் இலங்கைக்கு ஏற்படும் தாக்கங்கள் தொடர்பிலும் அவர் இதன் போது கருத்து வெளியிட்டார்.

இந்திய பிரதமருக்கும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது 13 வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது பற்றி பேசப்பட்டுள்ளது.

13வது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்ற அதிகாரங்களை அமுல்படுத்துவது சம்பந்தமாகவும் இரு தலைவர்களும் பேசியுள்ளனர்.

அதிகாரத்தை பரவலாக்கும் எந்த அக்கறையும் அரசாங்கத்திற்கு இல்லை எனவும், அதிகாரத்தை பரவலாக்குவதன் மூலம் நாட்டின் அபிவிருத்தி வேகமாகக் கூடும் எனவும் கிரியெல்ல குறிப்பிட்டார்.

இரண்டாம் இணைப்பு-

இலங்கைக்குள் அதிகாரத்தை பரவலாக்க தயார் என்றால் அதற்காக ஐக்கிய தேசியக் கட்சிக்கு அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.

13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்ற தீர்வை வழங்குமாறு இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னரஇ ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் இந்தியா ஆகியவற்றிடம் 13 வது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்ற தீர்வை வழங்குவதாக எழுத்து மூலம் உறுதியளித்தது.

அதனை அமுல்படுத்தும் நேர்மையான நோக்கதுடன் அரசாங்கம் இந்த உறுதிமொழியை வழங்கியாத என்பது எனக்கு தெரியாது.

இந்தியாவின் வெளிநாட்டு கொள்கைகள் வகுக்கப்படும் போது இந்திய மாநிலங்களுடன் கலந்துரையாடி தீர்மானிக்க வேண்டும் என்பது பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்திய பிரதமர் தமிழகத்தின் நிலைப்பாடுகளை கவனத்தில் கொள்ளாது இருக்க முடியாது.

13 வது அரசியல் அமைப்புத் திருத்தம் பற்றி ஐக்கிய தேசியக் கட்சி நன்கு அறியும். இலங்கையில் அதிகார பரவலாக்கம் ஒன்று அவசியம். அதிகாரப் பரவலாக்கம் மூலம் நாட்டில் அபிவிருத்தி ஏற்படும்.

இந்தியா சுதந்திரமடைந்த பின்னர், அந்நாட்டில் அதிகாரங்கள் பகிரப்பட்டதால் இந்தியா வேகமாக முன்னேறியது. முதலீடுகளை செய்வதில் இந்தியாவில் மாநிலங்களுக்கு இடையிலும் தற்போது போட்டியான நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டார்.

Author: TELO Media Team 1