Hot News
Home » செய்திகள் » கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் சாவகச்சேரியில் இருந்து வந்தவர்களாம்! இராணுவம்

கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் சாவகச்சேரியில் இருந்து வந்தவர்களாம்! இராணுவம்

கிளிநொச்சியில் காணி உரிமை கோரி இன்று முற்பகல் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சாவகச்சேரியில் இருந்து பஸ்களில் அழைத்து வரப்பட்டவர்கள் என இராணுவம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய இதனை கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

குறித்த காணிக்கு காணி உறுதிகள் எதுவுமில்லை. இதனால் அதன் உரிமை யாருடையது என்பதை அறிவது சிக்கலாக இருக்கின்றது.

அந்த காணிக்கு அருகில் உள்ள இடத்தையே விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மாவீரர் தின உரையை நிகழ்த்த பயன்படுத்தி வந்தார்.

பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்கப்பட்ட நிலங்கள் கிளிநொச்சி மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இதனால் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கிளிநொச்சி மக்கள் கலந்து கொள்ளவில்லை எனவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

Author: TELO Media Team 1