Hot News
Home » செய்திகள் » பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி காணி சுவீகரிப்பில் படையினர் தீவிரம்! வடமராட்சியில் சம்பவம்

பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி காணி சுவீகரிப்பில் படையினர் தீவிரம்! வடமராட்சியில் சம்பவம்

பொதுமக்களின் எதிர்ப்புகளை மீறியும் யாழ்.மாவட்டத்தில் புதிய படைமுகாம்களை நிறுவுவதற்கென ஏக்கர் கணக்கில் காணிகளை சுவீகரிப்பதில் படையினர் தீவிரம்

இவ்வாறு இன்றைய தினம் யாழ்.வடமராட்சி, அல்வாய், திக்கம் பகுதியில் பொதுமக்களுக்குச் சொந்தமான 8 ஏக்கர் காணியினை இராணுவத்தினர் சுவீகரிக்கும் நோக்கில் நில அளவையாளர் மூலம் அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வியடம் தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் தெரிவிக்கையில்,

ஜே – 400 கிராம அலுவலர் பிரிவிற்குள் அமைந்துள்ள 31 குடும்பங்களுக்குச் சொந்தமான மேற்படி காணிகளை இராணுவ முகாம் அமைப்பதற்காக சுவீகரிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக அறிந்ததையடுத்து, தானும் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வி.சிவயோகம் மற்றும் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் அவ்விடத்திற்குச் சென்று காணி அளவிடுவதினைத் தடுத்து நிறுத்த முயன்றோம்.

இருப்பினும் இராணுவத்தினர் எங்களை உள்ளே நுழைய விடாமல் இராணுவ வாகனங்களைக் குறுக்காக விட்டிருந்ததுடன், காணிகள் சுவீகரிப்பதற்கான அளவீடுகளையும் மேற்கொண்டனர்.

குறித்த காணிகளுக்குச் சொந்தமான குடும்பங்கள் மிகவும் வறுமைக் கோட்டிற்குட்பட்ட குடும்பங்கள் என்பதுடன், அவர்கள் இந்தக் காணிகளை இழந்தால் அவர்களிடம் மீதமாக எதுவுமே இருக்காது.

இராணுவத்தினர் எடுத்துவரும் இவ்வாறான நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் மேலும் அச்ச உணர்வையேற்படுத்தியுள்ளதோடு, இராணுவத்தினர் மீது பகையை மேலும் அதிகரித்துள்ளது என்றும் மாகாண சபை

Author: TELO Media Team 1