Hot News
Home » செய்திகள் » சம்பூர் அனல் மின்சார திட்டத்தை தீவிரமாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

சம்பூர் அனல் மின்சார திட்டத்தை தீவிரமாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

இந்தியாவின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் திருகோணமலை சம்பூர் அனல் மின்சார திட்டத்தின் பணிகளை தீவிரப்படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சத்தியப்பிரமாண நிகழ்வுக்கு சென்று திரும்பிய நிலையிலேயே ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

தமது 512 மில்லியன் டொலர்கள் நிதியுதவியில் சம்பூரில் அனல் மின்சார திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்தியா கடந்த ஒக்டோபர் மாதத்தில் அறிவித்தது.

எனினும் அந்த பணிகள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இந்தநிலையில் இன்று குறித்த அனல் மின்சார திட்டத்தை தீவிரமாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ராஜபக்ச, மின்சக்தி எரிபொருள்துறை அமைச்சுக்கு உத்தரவிட்டுள்ளார்.

250 மெகாவாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யவுள்ள இந்த அனல் மின்சார நிலையம் 2018 ம் ஆண்டளவில் தமது பணிகளை ஆரம்பிக்கவுள்ளது..

Author: TELO Media Team 1