Hot News
Home » செய்திகள் » மக்களுக்கு நிவாரணங்களை வழங்க முடியாத அரசாங்கம் ஆட்சியிலிருந்து விலக வேண்டும்!- ரணில்

மக்களுக்கு நிவாரணங்களை வழங்க முடியாத அரசாங்கம் ஆட்சியிலிருந்து விலக வேண்டும்!- ரணில்

நாட்டு மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுக்க முடியாத பட்சத்தில் இந்த அரசாங்கம் ஆட்சியிலிருந்து விலக வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய போதே அந்த இந்த விடயத்தை குறிப்பிட்டார்..வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் கோழி இறைச்சியின் கிலோ விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது.பாண் இறாத்தல் இரண்டு ரூபாவால் அதிகரிக்கப்பட்டது.இவை அனைத்தையும் கடந்த பின்னர் அரச சேவையாளரின் ஒரு நாள் வேதனம் 25 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது.எனவே நாங்கள் வேதன அதிகரிப்பை மேலும் கோருகின்றோம்.இதன் காரணமாக உரிமைகளை பெறவும், நிவாரணங்களை பெறவும், மக்களை ஒன்றிணைத்து வீதியில் இறங்கி போராட தீர்மானித்துள்ளோம்.

Author: TELO Admin