Hot News
Home » செய்திகள் » இலங்கை : ‘வரவு செலவுத் திட்டம் பொதுமக்கள் நிவாரணத்தை நோக்காக கொண்டதல்ல’

இலங்கை : ‘வரவு செலவுத் திட்டம் பொதுமக்கள் நிவாரணத்தை நோக்காக கொண்டதல்ல’

இலங்கையின் இவ்வருடத்துக்கான வரவு செலவுத் திட்டம் பொதுமக்களுக்கான நிவாரணங்களை நோக்கியதாக இல்லாமல், அரசாங்கத்தின் செலவினங்களை கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது என்று பொருளாதார நிபுணர் ஒருவர் கூறியுள்ளார்.அதிலும் குறிப்பாக குறிப்பிட்ட சில துறைகளை நோக்கி அபிவிருத்தித் திட்டங்களை நகர்த்துவதை இது அடிப்படையாகக் கொண்டது என்றும் அவர் கூறுகிறார்.பொதுமக்களுக்கான நிவாரணங்கள் எதுவும் இதில் பெரிதாக கிடையாது என்றும், அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளில் அதிகரிப்பு இருந்தாலும், அது விலைவாசி உயர்வை முகங்கொடுக்கக் கூடியதாக காணப்படவில்லை என்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளரான கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.விவசாயத்துறைக்கு குறிப்பாக கிராமிய மட்டத்தில் சில நன்மைகளை இந்த வரவு செலவுத்திடம் வழங்கினாலும், அது விவசாயிகளுக்கு நேரடியாக பலன்களைத் தருமா என்பது சந்தேகமே என்றும் அவர் கூறினார்.வழமைபோன்று பாதுகாப்புத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டிருப்பதுடன், மலையக பெருந்தோட்டத்துறைக்கு எந்த விதமான நேரடியான பலன்கள் அற்றதாவும் இந்த வரவு செலவுத்திட்டம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Author: TELO Admin