Hot News
Home » செய்திகள் » இனப்பிரச்சினைக்கான தீர்வு 13இல் இல்லை 19 இல் வழங்கப்படும்! : பசில் ராஜபக்ச

இனப்பிரச்சினைக்கான தீர்வு 13இல் இல்லை 19 இல் வழங்கப்படும்! : பசில் ராஜபக்ச

இனப்பிரச்சினை தீர்வுக்காக கொண்டு வரப்பட்ட 13வது அரசியலமைப்பு சீர்திருத்தத்தை ரத்து செய்து அதற்காக அர்த்தமுள்ள அதிகாரப் பரவலாக்கலை கொண்டு வரும் வகையில் 19 வது அரசியலமைப்பு சீர்திருத்தம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.அமைச்சர் பசில் ராஜபக்ச இதனை அறிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவிடம் இதற்கான யோசனை முன்வைக்கப்படும்.இது தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்படும். அவர்களுக்கு கால அவகாசமும் வழங்கப்படும். அவர்கள் பதில் வழங்காதபோது தமிழர் பிரச்சினைக்கான தீர்வு நடவடிக்கைகள் 19 வது திருத்தச் சட்டமூலத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் என்றும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, நாடாளுமன்றத்தில் 13வது அரசியலமைப்புக்கு பதிலாக அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு திட்டம் அவசியம என்று தெரிவித்திருந்த நிலையிலேயெ பசிலின் கருத்து வெளியாகியுள்ளது. இதேவேளை, 13வது அரசியலமைப்பு ரத்து செய்யக்கோரி நாளை தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்யவுள்ளார்.இது ஏற்கனவே வடக்கு கிழக்கு இணைப்பை ரத்து செய்யுமாறு ஜே.வி.பியினால் தாக்கல் செய்யபப்ட்ட மனுவுக்கு ஒத்ததாக அமையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Author: TELO Admin