Hot News
Home » செய்திகள் » இணையத்தளங்களின் நிர்வாகிகள் அரசாங்கத்திடம் மன்னிப்புக்கோரினர்

இணையத்தளங்களின் நிர்வாகிகள் அரசாங்கத்திடம் மன்னிப்புக்கோரினர்

இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கடுமையாக கண்டித்து வந்த இணையத்தளங்களின் நிர்வாகிகள், அரசாங்கத்திடம் மன்னிப்பு கோரியுள்ளனர்
கடந்த 15ஆம் திகதியன்று இவர்கள்,அரசாங்கத்தின் உயர்மட்ட அமைச்சர்களை சந்தித்து இந்த மன்னிப்பை கோரியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
‘ப்ரபெசனல் ஜேனலிஸ்ட் எசோஷியேசன்’ என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்த இந்த இணையத்தள அமைப்பினர் அமைச்சர்களான பெசில் ராஜபக்சääகேஹலிய ரம்புக்வெல்ல, ஊடக அமைச்சின் செயலாளர் சரித்த ஹேரத் ஆகியோரை சந்தித்து கடந்த கால செயல்களுக்காக மன்னிப்பை கோரினர்
இந்தநிலையில் இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ள தமது பல இணையத்தளங்களை மீண்டும் செயற்பட அனுமதிக்கவேண்டும் என்றும் அவர்கள் இதன்போது கோரிக்கை விடுத்தனர்
அவ்வாறு தமது இணையத்தளங்கள் செயற்பட அனுமதிக்கப்பட்டால் தாம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின்போது அரசாங்கத்துக்கு ஆதரவாக செயற்படவும் அவர்கள் உறுதியளித்தனர்
எனினும் அரசாங்கத்தரப்பு,குறித்த இணையத்தளங்களுக்கு தாம் நிதியுதவியை வழங்கமுடியாது என்று மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

TELO Media Team 1