Hot News
Home » செய்திகள் » பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சட்ட விரோதமானது: எஸ்.பீ.திஸாநாயக்க

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சட்ட விரோதமானது: எஸ்.பீ.திஸாநாயக்க

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் சிலர், பிரதமருக்கு எதிராக சமர்ப்பித்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை சட்டரீதியான ஆவணம் அல்ல என கிராமிய பொருளாதார விவகார அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அமைச்சரை மேற்கோள் காட்டி சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அது சட்டரீதியான ஆவணம் இல்லை. எனவே அதனை நிராகரிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஒரே அமைச்சர்கள் பல்வேறு இடங்களில் கையொப்பமிட்டால் அந்த ஆவணம் சட்டரீதியானதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை ஆவணத்தை, நாடாளுமன்ற செயலாளரினால் நிராகரிக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரதமர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்ற செயலாளரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

TELO Media Team 1