வாழைச்சேனையில் இரு இனங்களுக்கிடையில் இடம்பெற்று வரும் வாக்கு வாதத்தால் முறுகல் நிலை தோன்றியுள்ளது. பஸ் தரிப்பிடம் ஒன்றினை கட்டுவதற்கு வாழைச்சேனை பெற்றேல் நிலையத்திற்கு அருகில் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் அடிக்கல் நடப்பட்டது.
இந்நிலையில் வாழைச்சேனையில் சகோதர இனத்தவர்கள் அந்த அத்திவாரத்தை மூடிவிட்டு அதன் மேல் அவர்களின் முச்சக்கரவண்டியை நிறுத்தி இங்கே பஸ்தரிப்பிடம் கட்ட அனுமதிக்க மாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் குறித்த பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன் கலகம் அடக்கும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்