Hot News
Home » Blog @ta » பல்கலை. மாணவர்களின் போராட்டத்துக்கு ஆசிரியர் சங்கமும் ஆதரவு

பல்கலை. மாணவர்களின் போராட்டத்துக்கு ஆசிரியர் சங்கமும் ஆதரவு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தை வரவேற்பதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்தது.

இது தொடர்பில் சங்கம் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது, தமிழ் அரசியல் கைதிகளை, அரசியல் தீர்மானம் எடுத்து நிபந்தனையின்றி விடுதலை செய்ய வலியுறுத்தியும் உணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மூன்று அரசியல் கைதிகளின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தியும் அதனை இழுத்தடிப்பின்றி உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று அரசையும் பொறுப்புக்கூறவேண்டிய தமிழ் தரப்பினரையும் வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்ட பொது அமைப்புக்களின் போராட்டத்தின் தொடர்ச்சியாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் இந்தப் போராட்டம் தொடர்ந்து முன்னெ டுக்கப்படு கிறது. இதற்கு சங்கம் முழுமையான ஆதரவைத் தெரிவிக்கிறது.

சமூக நீதிக்கான தேடல் வியாபித்துள்ள பல்கலைக் கழக மாணவர்களின் செயற்பாட்டை அனைத்துத் தரப்பினரும் கோட்பாட்டு ரீதியாக ஆதரிக்க வேண்டியது சமூகக் கடமை. அரசியல் கைதிகளின் விடுதலை என்பது தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுப்பதற்கான பங்களிப்பை மேற்கொண்ட வர்களுக்கு தமிழ்ச் சமூகம் செய்யக்கூடிய நன்றிக்கடன் என்பதை அனைத்துத் தரப்பினரும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

மாணவர்களை அச்சுறுத்துவதன் மூலமாக போராட்டத்தை நசுக்கும் செயற்பாட்டை செய்யும் எவராயினும் தமிழ் மக்களின் சமூகக் கடமையை நிறைவேற்றத் துடிக்கும் மாணவர்களுக்கு இடைஞ்சல் புரிந்தவராகவே வரலாற்றில் இடம்பிடிப்பர். அத்தகைய வரலாற்று அவ மானத்தை எவரும் பெற்றுவிடக்கூடாது என்பதை இலங்கை ஆசிரியர் சங்கம் வேண்டிநிற்கின்றது, என்றுள்ளது.

TELO Media Team 1