Hot News
Home » செய்திகள் » முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல்களுக்கு சர்வதேச விசாரணை கோரும் விக்கி

முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல்களுக்கு சர்வதேச விசாரணை கோரும் விக்கி

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்து சர்வதேச விசாரணைக்கு வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்

கடந்த ஏப்ரல் 21ம் திகதி இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பின்னர் முஸ்லிம் மக்களின் உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தமிழ் மக்கள் கூட்டணியின் கலந்துரையாடலின் போது அவர் இதனை தெரிவித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“முஸ்லிம் மக்கள் இலங்கையில் ஒரு பாகமாக இருந்து வருகின்றனர். எனினும், ஏப்ரல் 21 தாக்குதலுக்கு பின்னர் காரணமின்றி முஸ்லிம்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

முஸ்லிம் மக்கள் தமிழ் மக்களுடன் மிகவும் நெருக்கத்துடன் இருந்து வருகின்றனர். இந்நிலையில், அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து சர்வதேச சமூகம் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை மற்றும் ஏனைய சர்வதேச அமைப்புக்களுக்கு இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்யவேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.