Hot News
Home » கட்டுரைகள் » இலங்கைத் தீவின் கருப்புப் பக்கம்

இலங்கைத் தீவின் கருப்புப் பக்கம்

இலங்கையில் தமிழர்தம் வாழ்க்கையின் கரைபடிந்த ஒரு வரலாற்று சரித்திரம் உருவாகிய காலகட்டம் இது. கருப்பு ஜூலை என்று வர்ணிக்கப்படுகின்ற ஒரு தமிழினத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இன சுத்திகரிப்பினை இம்பாதம்  வெளிப்படுத்தி நிற்கிறது.


1983ஆம் ஆண்டு இதே மாதம் இதே திகதிகளில் நடைபெற்ற ஒரு மாபெரும் இன சுத்திகரிப்பு நிகழ்வாக இது உலக வரலாற்றில் பதியப்பட்டுள்ளது.

ஜூலை கலவரம் என்கின்ற போது அனைத்து தமிழர் தரப்பும்தாங்கள் அடக்கு முறைக்கு உட்பட்ட இனம், தாங்கள் வன்முறையை எதிர்நோக்கிய இனம், தாங்கள் இந்த தீவிலேயே நிர்கதிக்கு உள்ளாக்கப்பட்ட இனம் என புரியவைத்து போகிறது.


 எந்த தமிழனினால் இத்தீவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுக்கப்பட்டதோ அந்த தமிழர் தரப்பையே சிங்களவர்கள் கொன்றொழிக்க முன்பட்ட தினம் இது என்று நிலத்திலும் சரி புலத்திலும் சரி அனைத்து தமிழர்களும் தங்கள் ஆழ்மனதில் பதிந்து வைக்க வைத்திருக்க வேண்டிய ஒரு கருப்பு சரித்திரம் இது. 

இந்த சரித்திரத்தை தாங்கள் மட்டுமல்ல தங்களுடைய அடுத்த தலைமுறைக்கும் இந்த வரலாற்றுச் சம்பவங்களை  நிகழ்வுகளை  அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு இன்றைய தலைமுறைக்கு உள்ளது .


இந்த கலவரத்தில் நேரடியாகப் பாதிக்கப்பட்ட பலர் இருக்கிறார்கள், தமிழர்கள் உடைய எத்தனையோ கோடி சொத்து மதிப்பு உள்ள அனைத்து நிலையான நிலையற்ற சொத்துக்கள் எரியூட்டப்பட்டன, சிங்களத்தின் கடைநிலை செயற்பாடுகள் அந்த காலகட்டத்திலேயே வெளிப்பட்டு நின்றது. 

எத்தனையோ மக்கள் நிர்வாணப்படுத்தி தீயிட்டு கொளுத்தப்பட்டனர், பெண்கள் பலாத்காரத்துக்கு உட்படுத்தபட்டார்கள். அவர்கள் உயிருடன் எரிக்கப்பட்டார்கள், என்பதை எந்த தமிழ் மகனும் மறந்துவிட முடியாத ஒரு கருப்பு சரித்திரம்  அவை.


அந்த சரித்திரத்தின் 36வது ஆண்டு நினைவிலேயே நாங்கள் இன்று நின்று கொண்டிருக்கிறோம். இந்த சரித்திரத்தை இந்த இலங்கைத் தீவிலே சகோதரத்துவமாக மதிக்க வேண்டிய இனத்தை, இந்த இலங்கைத் தீவுக்கு ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் வாங்கிக் கொடுத்த அந்த இனத்தை இவர்கள் இன்று வரை ஒரு அடிமைத்தனத்தில் பார்க்கின்ற, அவர்களுக்கு உரிய தீர்வை கொடுக்காமல் ஏமாறுகிற இன்னும் இன்னும் அவர்களுடைய நிலங்களையும் பூர்வீகச் சொத்துக்களையும் அவருடைய கலை கலாச்சார விழுமியங்களையும் சூறையாடுகிற ஒரு தரப்பாகவே இன்னும் அவர்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள்.


ஆகவே நவீனத்துவத்தில் இருந்தாலும் இன்னும் ஒரு நவீனத்துவ சிங்கள காலனித்துவ காலத்திலேயே தமிழர்களை சிங்களம் வைத்திருக்க விரும்புகிறது.

இவற்றையெல்லாம் அவர்களும் புரிந்து திருத்தி,  தமிழர் தரப்பும் இந்த அடக்குமுறைகளிலிருந்து எவ்வாறு முன் வரவேண்டும் என்ற வித்தியாசமான நவீன உத்திகளையும் , கல்வி முறையிலும் பொருளாதார முறையில் மீண்டும் நிமிர்ந்து நிற்க வேண்டும், என்றும் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பதிவு செய்வதோடு மட்டுமல்லாது அடுத்த தலைமுறைக்கு ஊடுகடத்தல் வேண்டும்.

ஒவ்வொரு தமிழன் தமிழச்சிக்கும் தமிழ் மகனுக்கும் அன்று தங்கள் இனத்துக்கு இழைக்கப்பட்ட அந்த கருப்பு வேதனையான பக்கங்களை மனதில் பதிய வைக்க வேண்டும். அது ஒரு இனத்தினுடைய வரலாற்று கடமை என்பதையும் நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே இந்த வெலிக்கடை சிறை படுகொலையில் படுகொலை செய்யப்பட்டழர்கள், பொதுமக்கள் என அத்தனை உறவுகளுக்கும் அஞ்சலிப்பதோடு,  இனியும் இந்த இலங்கைத் தீவிலே இவ்வாறானதொரு சம்பவங்கள் இடம் பெறாமல் பிரார்த்திப்போமாக.

மதுசுதன்