Hot News
Home » செய்திகள் » சுவிஸ் வீரமக்கள் தின நிகழ்வில் `ரெலோ` சுவிஸ் கிளை உறுப்பினர்கள் பங்கேற்பு

சுவிஸ் வீரமக்கள் தின நிகழ்வில் `ரெலோ` சுவிஸ் கிளை உறுப்பினர்கள் பங்கேற்பு

சுவிஸில் நடைபெற்ற, `புளொட்` அமைப்பின் வீரமக்கள் தின நிகழ்வில் ரெலோ சுவிஸ்  கிளை உறுப்பினர்கள் கலந்து  சிறப்பித்தார்கள்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை, 4552, Derendingen எனுமிடத்தில், சுவிஸ் வீரமக்கள் தின நிகழ்வு சுவிஸ் ரஞ்சன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

ரெலோ சுவிஸ் கிளையின் சார்பான கைச்சுடர்களை தோழர்கள் விமல், சேகர், சீலன் மற்றும் ஞானம் ஆகியோர் ஏற்றி வைத்தனர்.

இதனைத் தொடந்து விடுதலைப் போராட்டத்தில் மரணித்த அனத்துக் கழகத் தோழர்கள், அனைத்து அமைப்புகளின் போராளிகள், பொது மக்களுக்கான அஞ்சலி நிகழ்வாக சுடரேற்றப்பட்டது. நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் மலரஞ்சலியும் செலுத்தினர். இந்நிகழ்வினைத் தொடர்ந்து இரு நிமிட மௌன அஞ்சலியுடன் உரை நிகழ்வுகள் ஆரம்பமாகியது.

ரெலோ அமைப்பின் சார்பில் தோழர் ஞானம் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், தனது கடந்த கால ரெலோ, புளொட் அமைப்பின் மறைந்த தோழர்களுடைய  உறவுகள் குறித்தும் விபரித்ததுடன், இன்றைய அரசியல் சூழல், இன ஐக்கியம், தமிழ் தரப்பின் செயல்பாடுகள், இலங்கையில் நடைபெறும் இன, மத, மொழி மாற்றம், தமிழ் பேசும் மக்களின் பறிபோகும் பிரதேசங்களின் யதார்த்த சூழ்நிலைகள் குறித்து விரிவாகப் பேசினார்