Hot News
Home » செய்திகள் » முல்லை. புளியமுனை தமிழ் மீனவர்களின் தொழில் உபகரணங்கள் மாயம்!

முல்லை. புளியமுனை தமிழ் மீனவர்களின் தொழில் உபகரணங்கள் மாயம்!

முல்லைத்தீவு, கொக்கிளாய் புளியமுனை பகுதியைச் சேர்ந்த 25 மீனவர்களின் தொழில் உபகரணங்கள் இரவோடிரவாக மாயமாகியுள்ளன

இந்நிலையில, இன்று காலை வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மக்கள் இச்சம்பவம் தொடர்பில் தெரிவித்துள்ளனர்.

ஜானகபுர பகுதியைச் சேர்ந்த சிங்கள மீனவர்கள் மீதும் புல்மோட்டை பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் மீனவர்கள் மீதும் தாம் சந்தேகம் கொண்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மாகாண சபை உறுப்பினர் ரவிகரன்,

3 படகுகள், 8 குல்லாக்கள், 25 வலைகள் என பல லட்சம் பெறுமதியான தமிழ் மீனவர்களின் தொழில் உபகரணங்கள் இரவோடிரவாக திருடு போயுள்ளது.

அதிகாலை குறித்த திருட்டை அறிந்து கொண்ட அப்பகுதி தமிழ் குடும்பங்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளன.

சமீபத்தில் தடை செய்யப்பட்ட தொழில்களை செய்த சிங்கள மீனவர்களை முல்லைத்தீவு கடற்றொழில் உதவிப் பணிப்பாளருடன் இணைந்து, கைது செய்யும் நடவடிக்கையில் தமிழ் மீனவர்கள் பங்களித்தார்கள் என்கிற காழ்ப்புணர்ச்சியே இத்திருட்டுக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

அது மட்டுமின்றி 3 தினங்களுக்கு முன்னர் கடற்பரப்பில் வைத்து தமிழ் மீனவர்களின் வலைகளை புல்மோட்டை முஸ்லிம் மீனவர்கள் பறித்துச் சென்றிருந்தனர்.

இத்திருட்டுச் சம்பவத்தால் அப்பகுதியில் தமிழ் மீனவர் குடும்பங்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளதோடு, அழுகுரலுடன் தன்னிடம் கருத்துக்களை பதிவு செய்தனர் என்றார்.

TELO Media Team 1